பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடத்த பேட்ட படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசமும் 2019 பொங்கல் திருநாளில் வெளியாகின. இரண்டு மெகா ஹீரோக்களின் படங்கள் ஒரேநாளில் வெளியானால் இரண்டில் ஒரு படம் தான் வெற்றி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், இரண்டு படங்களுமே நல்ல வசூலை கொடுத்தன.
இந்த நிலையில், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாவதை ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டனர். திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்பதற்காகவே கொரோனா இரண்டாவது அலை நேரத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வையை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்க முடியாமல் தாமதமாகி வருகிறது. அதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்தில் வலிமை படம் திரைக்கு வராது என்று கூறும் அப்படக்குழுவினர், வருகிற தீபாவளிக்கு வலிமை கண்டிப்பாக திரைக்கு வந்து விடும் என்றும் தெரிவிக்கிறார்களாம். இதனால் ரஜினி, அஜித் மீண்டும் மோதும் சூழல் உருவாகி உள்ளது