பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் முதன்முதலாக ஓடிடி தளத்திற்கு வந்ததை அடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் வசூலை கொடுத்து அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கேற்ப கொரோனா அலையும் தொடர்ந்து வீசிக்கொண்டிருப்பதால் தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகப்போகின்றன.
இந்த நிலையில், தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இயக்கி வரும் மணிரத்னம் இதுவரை தான் இயக்கியுள்ள தளபதி, ரோஜா உள்ளிட்ட 26 படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிடப்போகிறாராம். அதனால் தற்போது தனது படங்களை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றும் பணிகளை தொடங்கியிருக்கிறார் மணிரத்னம்.




