இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கேரளாவை பொறுத்தவரை முதல் அலையில் ஆரம்பத்தில் கவனமாக இருந்தாலும், பின்னர் வந்த நாட்களில் நிறைய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது அலையையும் சமாளிக்கும் விதமாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அப்படி தான் இதுவரை கொரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகளை தனது டுவிட்டர் பக்கத்திலும் அப்டேட் செய்துள்ளார் கேரளா முதல்வர். இதனை கண்டு வியந்துபோன நடிகை ஐஸ்வர்ய லட்சுமி முதல்வரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுபற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐ லவ் யூ சீப் மினிஸ்டர். நான் எந்த ஒரு கட்சியை சேர்ந்தவளும் அல்ல. ஆனால் நமது மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் கையாளும் விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் உங்களது செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கையை தருகிறது” என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஜோடியாக அறிமுகமான மலையாள நடிகை' ஐஸ்வர்ய லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது