நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
இந்த கொரோனா காலகட்டத்தில் பல பிரபலங்களை தமிழ் திரையுலகம் இழந்து வருகிறது. கடந்த வருடம் இயக்குனரும் நடிகருமான விசுவின் மரணத்தில் ஆரம்பித்து, பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் எஸ்பி ஜனநாதன், சமீபத்தில் நடிகர் விவேக் என ரசிகர்களை வசீகரித்த பலரும் இந்த உலகை விட்டு அதிர்ச்சி தரும் விதமாக நீங்கி சென்றுள்ளார்கள்
தற்போது இயக்குனர் கேவி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தி திரையுலகத்தினரையும் அவரது ரசிகர்களையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பலரும் அவருக்கு தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர் அந்தவகையில் மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் இருவரும் கே.வி.ஆனந்த்தின் மரணத்துக்கு தங்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் அறிமுகமாகி வளர்ந்து வந்த காலகட்டத்தில், முதன்முதலாக அவரை தமிழுக்கு அழைத்து வந்து, அழகிய சாடிஸ்ட் வில்லனாக தனது முதல் படமான 'கனா கண்டேன்' படத்தில் அறிமுகப்படுத்தினார் கே.வி ஆனந்த் அதன்பிறகு பிரித்விராஜ் தமிழில் பல படங்களில் நடிப்பதற்கும் மற்றும் மலையாள திரையுலகில் இன்னும் அதிக உயரம் அடைவதற்கும் கே.வி.ஆனந்த் ஒரு மிகப்பெரிய காரணம் இதை குறிப்பிட்டுள்ள பிரித்விராஜ், எனது வாழ்வின் மிக முக்கியமான நபராக நீங்கள் எப்போதும் இருந்துள்ளீர்கள். சினிமா உங்களை ரொம்பவே மிஸ் பண்ணும்.. இதயம் உடைந்தது” என்று தனது இரங்கல் செய்தியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதேபோல கேவி ஆனந்த் கடைசியாக இயக்கிய காப்பான் படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர் மோகன்லாலும் இணைத்து நடித்திருந்தார். தமிழில் செலக்டிவாக மட்டுமே படம் நடித்து வந்த மோகன்லால், விஜய்யுடன் ஜில்லா படத்தில் இணைந்து நடித்த பின்பு, ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு, அடுத்ததாக தமிழில் காப்பான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது கே.வி.ஆனந்த்துக்காகத்தான். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பே மோகன்லால் நடித்த 'தென்மாவின் கொம்பத்து' படத்தில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழில் தங்கள் இருவருக்கும் மிக முக்கியமான படங்களை தந்து பங்களிப்பு செய்த கே.வி.ஆனந்துக்கு கனத்த நெஞ்சத்துடன் தங்களது இரங்கலை இருவரும் தெரிவித்துள்ளனர்..