அனைத்து ஹீரோ படங்களும் வெளியாகும் ஆண்டாக 2022 அமையுமா? | விமான நிலையத்தில் பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சி | மகாபலிபுரத்துக்கு சுற்றுலா சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் | கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள் | மனைவியின் ஓராண்டு நினைவு தினம் : அருண்ராஜா காமராஜ் உருக்கம் | கேஜிஎப் 2வால் ஷங்கருக்கு ஏற்பட்ட பெரியப்பா அனுபவம் | விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்? | தனுஷின் தயாரிப்பு நிறுவன யு-டியூப் பக்கம் முடக்கம் | 'சலார்' - பிரமோஷன் வேலைகள் இனிதே ஆரம்பம் | செளந்தர்யாவிடம் மட்டும் தான் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் - விக்னேஷ் கார்த்திக் |
விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் 'லால்பாக்' படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகள் கழித்து தான் பைக் ஓட்டியதைப் பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“15 ஆண்டுகளுக்குப் பிறகு பைக் ஓட்டுகிறேன். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த 'டச்'சை நான் இழக்கவில்லை. உங்களிடம் இருக்கும் போது ஏன் வேறு ஒருவர் உங்களை சவாரிக்கு அழைத்துச் செல்ல காத்திருக்க வேண்டும். திரைப்படங்களில் ஒரு வாழ்க்கையை உருவாக்குவது என்பது, நகரத்தில் மோட்டார் சைக்கிள் சவாரியை செய்ய ஒதுக்கி வைக்கும் நாட்களைப் போன்றதாகும். ஓ.. அந்த பெங்களூர் நாட்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா ஓட்டிய பைக் புகழ் பெற்ற ஹார்ட்லி டேவிட்சன் பைக்காகும். பஹ்ரைன் நகரில் அவர் அந்த பைக்கை ஓட்டிய வீடியோவையும், புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.