'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு நடிகரும் செய்யாத உதவியை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். கடந்த வருடம் கொரோனா அலை முதன் முதலாக வந்த போதே பல்வேறு உதவிகளைச் செய்தார். தற்போது இரண்டாவது அலை வந்த போது அவரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சையிலிருந்து வந்த பின் மீண்டும் பழையபடி உதவிகளைச் செய்ய ஆரம்பித்து வருகிறார்.
இந்த அலையில் உதவிகள் கேட்டு வரும் அழைப்புகள் அதிகமாக இருப்பதாக சோனு சூட் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அவருடைய மொபைல் போனில் உதவி கேட்டு வரும் அழைப்புகளை அப்படியே வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக அவருக்கு மெசேஜ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.
“உங்களைத் தொடர்பு கொள்ள முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். ஏதாவது தாமதம் என்றாலோ, தவறவிட்டாலோ, மன்னித்துக் கொள்ளுங்கள்,” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தித் திரையுலகிலும், தென்னிந்தியத் திரையுலகிலும் கோடிக்கணக்கான சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் அமைதியாக இருக்க, வில்லன் நடிகராக அதிகம் அறியப்பட்ட சோனு சூட் மனிதாபிமான அடிப்படையில் பலருக்கும் உதவி செய்து வருவதற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.