ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் |
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்து வருகின்றனர். நடிகர் பார்த்திபன் சில வாரங்களுக்கு முன் கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு ஏற்பட்ட அலர்ஜியால் முகம் வீங்கியது. இதுப்பற்றி டுவிட்டரில் பதிவிட்டவர், பின் அந்த பதிவை நீக்கினார். தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்த வேண்டாம் என்று தனது பதிவை நீக்கினார்.
இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பதிவிட்டு இருப்பதாவது : என் அன்பு மகள் கீர்த்தனா இத்த'கவலை' பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை. ஒவ்வாமை (allergy) சில சமயங்களில் உணவு, ஒப்பனை, அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு. பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும். இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. ஆனால் ஜூரம், உடல் வலி போன்ற ஒரு சில விளைவுகள் வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.