அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் தொடங்கி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. விஜய் அங்கு சென்றதை அடுத்து ஓரிரு நாட்களில் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். அதையடுத்து ஆக்சன், டூயட் உள்பட முக்கியமான பல காட்சிகளை அங்கு படமாக்கியிருக்கிறார் நெல்சன்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் விஜய் 65ஆவது பட யூனிட்டில் உள்ள சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதோடு இந்தியாவிலும் கொரோனா அதிகரித்து வருவதால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது. நேற்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் கடைபிடித்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரி சோதனை செய்து கொள்ளுங்கள். நான் நலமுடன் இருக்கிறேன். உங்களது அன்பு, ஆதரவிற்கு நன்றி'' என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.