'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமா துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடக்கும். கொரோனா பிரச்னையால் இந்தாண்டு நடக்கும் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி இரண்டு மாதங்கள் தள்ளிப்போய் இன்று(ஏப்.,26) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது.
சீன பெண் சிறந்த இயக்குனர்
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை நோமெட்லெண்ட் படத்திற்காக சீன பெண் இயக்குனர் குளோயி சாவ் என்பவர் வென்றார். ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த பெண் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெறும் இரண்டாவது பெண் இவர் ஆவார். இதற்கு கடந்த 2010ல் கேத்ரின் பிக்லோ என்பவர் ‛தி ஹர்ட் லாக்கர் என்ற படத்திற்காக வென்றார்.
சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது ‛நோமெட்லெண்ட் -ற்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது இப்படத்தில் நடித்த பிரான்சிஸ் மெக்டார்மேண்ட் என்பவர் பெற்றார்.
![]() சிறந்த துணை நடிகர் - டேனியல் கலுயா |
* சிறந்த துணை நடிகர் - டேனியல் கலுயா (படம் : யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா)
![]() சிறந்த துணை நடிகை - யூ ஜூங் யான் |
* சிறந்த துணை நடிகை - யூ ஜூங் யான் (படம் : மின்னாரி)