இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
ஹிந்தித் திரையுலகில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் கஜோல். தமிழில் 'மின்சார கனவு, விஐபி 2' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜய் தேவகனைக் காதலித்து கரம் பிடித்தவர் கஜோல்.
இந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். மகள் நிசாவிற்கு இன்று 18வது பிறந்தநாள். மகள் 18 வயதைத் தொடுவது குறித்து அவருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் கஜோல்.
“நீ பிறந்தபோது நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். அது என்னுடைய வாழ்க்கையின் மிகப் பெரும் பரீட்சையாக இருந்தது. அந்த பயமும் உணர்வும் என்னிடம் குறைந்தபட்சம் ஒரு வருடம் இருந்தது. பின்னர் உனக்கு 10 வயது ஆனது. நான் ஒரு ஆசிரியராக உணர்ந்தேன், புதிய வழிகளைக் கற்றுக் கொள்ளவும், அவற்றைப் பார்ப்பதற்கும், பெரும்பாலான நேரங்களில் ஒரு மாணவியாகவும் இருந்தேன்.
இப்போது இன்றைய நாளில் வந்துவிட்டோம். நான் பறக்கும் வண்ணங்களுடன் தேர்வு பெற்றுவிட்டேன். பெண்கள் எப்போதும் உயரப் பறக்க வேண்டும் என் அன்பே. உன்னுடைய பிரகாசத்தை எப்போதும் கீழிறக்கிக் கொள்ளாதே. இனிய இளமைப்பருவம். உன்னிடம் கருவிகள் இருக்கின்றன, அதனால் உனது சக்தியை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்து,” என மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அன்பு நிசாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இப்போதைய அழுத்தமான மனநிலையில் இது போன்ற சிறிய மகிழ்ச்சிகளே 'பிரேக்' ஆக அமையும். குணமாக வேண்டிய அனைவருக்கும் எனது நேர்மையான பிரார்த்தனைகள்,” என அப்பா அஜய் தேவகனும் மகளை வாழ்த்தியுள்ளார்.