ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில்தான் கலந்து கொண்டு நடித்தார். அப்படத்தின் நாயகிகளில் ஒருவராக ஹிந்தி நடிகையான ஊர்வசி ரட்டேலா நடிக்கிறார். படப்பிடிப்பில் அவருக்கு விவேக் தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் அர்த்தம் என்னவென்று சொல்லிக் கொடுக்கும் வீடியோவையும், அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இரங்கல் பதிவிட்டுள்ளார்.
அதில், “பத்மஸ்ரீ விவேக் சார், நான் உங்களை என்றென்றும் மிஸ் செய்கிறேன். என்னுடைய முதல் தமிழ்ப் படத்தில் உங்களைப் போன்ற சாதனையாளருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. உங்கள் இழப்பு எனக்கு அதிர்ச்சியளித்தது. நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள், இந்த உலகத்தைக் கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் நகைச்சுவை டைமி, வசனங்கள், மரங்கள் மீதான உங்கள் அன்பு. விவேக் சார் குடும்பத்திற்கு, ரசிகர்களுக்கு, நண்பர்களுக்கு எனது மனமுடைந்த இரங்கல்கள். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில நினைவுகள் உங்களுடன், அனைத்திற்கும் நன்றி சார்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இப்போதுதான் தமிழில் நடிக்க வரும் ஊர்வசி ரட்டேலா விவேக் பற்றி எழுதிய இரங்கல் பதிவிற்கு ரசிகர்கள் லட்சக்கணக்கான லைக்குகளை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் பல படங்களில் நடித்த நடிகைகள் கூட இப்படி ஒரு பதிவிட்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
https://www.instagram.com/p/CNzoaS0B2nN/