ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை(ஏப்., 20) முதல் அமலாக உள்ளது.
இதனால் தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெற முடியாது. ஏற்கெனவே 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் தான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வருவார்கள். அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் யாரும் வர முடியாது.
இந்நிலையால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு எதிர்பப்புத் தெரிவித்து தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை மூட முடிவு செய்ய உள்ளனராம். இது பற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். நாளை அவர்கள் கலந்து பேசி முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஏற்கெனவே 112 தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 200 தியேட்டர்கள் மூடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தியேட்டர்கள் மூடப்பட்டால் 50 சதவீத இருக்கைகள் இருந்தாலும் படங்களை வெளியிடத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஒரு வருட காலமாகவே தத்தளித்து வரும் தமிழ்த் திரையுலகம் தற்போதைய கொரானோ பரவல் காரணமாக மேலும் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.