Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 : கமல்ஹசானுடன் நடித்து முடித்த விவேக் ?

19 ஏப், 2021 - 11:18 IST
எழுத்தின் அளவு:
Indian-2-:-Sources-says-Vivek-acted-with-Kamal

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்த விவேக் சில தினங்களுக்கு முன்பு மறைந்தார். 1987ம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் அறிமுகமானவர். கடந்த 34 வருடங்களாகத் திரையுலகத்தில் இருந்தாலும் கமல்ஹாசனுடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்காமல் இருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 படம் ஆரம்பமான போது, அப்படத்தில் விவேக் நடிப்பாரா என்பது குறித்து ஒரு விவாதம் எழுந்தது. அந்த சமயத்தில் அது குறித்து டுவிட்டர் பதிவொன்றில், “எனது பள்ளி நாட்களில் இருந்தே நான் கமல்ஹாசன் சாரின் ரசிகன். 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படம் வந்த போது நான் சாந்தோம் ஹைஸ்கூலில் படித்து வந்தேன். அவருடன் பணியாற்றுகிறேனோ இல்லையோ நான் அவரது ரசிகன். கதைக்கு நான் தேவைப்பட்டால் இயக்குனர் ஷங்கர் என்னை நிச்சயம் அழைப்பார்,” என்று பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து, “நிகழும் வரை சொப்பனம், நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு, ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி, லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்,” என்று டுவீட்டில் குறிப்பிட்டு இந்தியன் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.

அதற்குப் பிறகு அவர் இந்தியன் 2 படத்தில் நடித்தார் என தற்போது விசாரித்ததில் தெரிய வருகிறது. படத்தில் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டதா, அதற்கு அவர் டப்பிங் பேசி விட்டாரா என்பதை படக்குழுதான் அறிவிக்க வேண்டும். இந்தியன் 2 படம் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளதால் அது பற்றி யாரும் தெரிவிக்க மாட்டார்கள்.

விவேக்கின் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டிருந்தால் அவற்றை நீக்க வாய்ப்பில்லை. அவர் டப்பிங் பேசவில்லை என்றாலும் வேறு யாரையாவது வைத்து பேசிக் கொள்ளலாம். ஆனால், அவர் காட்சிகள் முழுமையாக படமாக்கப்படவில்லை என்றால்தான் சிக்கல்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் விவேக்கை, தன் முந்தைய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த ஷங்கர், விவேக்கின் ஆசையை எப்படியும் நிறைவேற்றி வைப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி செய்தால் அது விவேக்கிற்கு ஒரு சிறந்த மரியாதை செய்தது போல இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


தன் அபிமான நடிகர் கமல்ஹாசனுன் நடித்த படத்தைப் பார்க்க மறைந்த விவேக்கால் முடியவில்லை என்றாலும் அவரது குடும்பத்தினராவது அதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனாநடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூட முடிவு? தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vena Suna - Coimbatore,இந்தியா
20 ஏப், 2021 - 00:01 Report Abuse
Vena Suna கமலை விட விவேக் திறமையான நடிகர்,,,
Rate this:
saraswathi - Chennai,இந்தியா
19 ஏப், 2021 - 16:25 Report Abuse
saraswathi கண்டிப்பாக திரு.கமல் அவர்கள் செய்யவேண்டும். ஏன் இதுவரை இவர் படத்தில் விவேக்கை நடிப்பதற்க்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பதே ஒரு பெரிய கேள்வி ? மேலும் திரு.கமல் அவர்களுக்கு சரியான துணை நடிகரும் விவேக்கும் ஒருவர் அப்படி இருக்க ஏன் இதுவரை நடிப்பதற்க்கு வாய்ப்பு வழங்கவில்லை?????
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
19 ஏப், 2021 - 12:54 Report Abuse
R S BALA டப்பிங் வேறு ஒருவரா ? அது நிச்சயம் செட்டாகாது .. அவரை போல பேசும் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் மூலம் பேச வைக்கலாம் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in