'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண். அரசியல், சினிமா இரண்டிலும் பயணித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது வக்கீல் சாப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தன் உதவியாளருக்கு ஏற்பட்ட கொரோனாவால் கடந்த சில நாட்களாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
இந்நிலையில் இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதுபோல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.