காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பேண்டசி படம் ஹாரிபார்ட்டர். 7 பாகங்கள் வரை வெளிவந்துள்ளது. அனைத்து பாகங்களிலும் நர்சிசா மல்ப்ய் என்ற கதாப்பாரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஹெலன் மெர்க்குரி. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஹெலன் மெர்க்குரி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ஸ்கைபால் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
52 வயதான நடிகை ஹெலன் மெர்க்குரிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஹெலன் மெர்க்குரி நேற்று காலமானார். இந்த தகவலை ஹெலன் மெரிக்குரியின் கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹெலன் மெர்குரியின் மரணம் ஹாரிபார்ட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.