கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் பகத் பாசில் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் அவர்தான் அந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்கிற செய்திகள் வெளியாகின. அதேசமயம் அதற்கு முன்பே கமலின் விக்ரமில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் பகத் பாசில் தான் நடிப்பதை உறுதிப்படுத்திய பிறகு கமல் படத்தில் விஜய் சேதுபதி இல்லை என்று கருதப்பட்டது.
ஆனால் இப்போது விஜய் சேதுபதி கூறியுள்ள ஒரு செய்தியில், விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க என்னை கேட்டார்கள். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா என்பதை இப்போதே சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.