விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தையடுத்து மீண்டும் விஜய் நடிப்பில் அவரது 66ஆவது படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கில் பிரமாண்ட படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தங்களுக்கு ஒரு படத்தை இயக்கித்தருமாறு லோகேஷ் கனகராஜிற்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மேலும் பிரபாஸ், ராம்சரண் இவரது இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இப்போது விஜய் 66 படத்தை முடித்த பின் மகேஷ்பாபுவை இவர் இயக்க போவதாக கூறப்படுகிறது.