ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் படம் அன்பறிவ். ஹிப்ஆப் தமிழா ஆதி, நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதி இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் அஷ்வின் ராம் கூறியதாவது: அன்பறிவு கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிராமிய பின்னணியில் ஆதி நடிக்கும் முதல் படம் இது. சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான படமாக உருவாகியிருக்கிறது.
படப்பிடிப்பு பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. பாடல் காட்சிகள் ரஷ்ய நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. 8 லிருந்து 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தினை விரைவில் வெளியிட தீவிரமான பணிகள் நடந்து வருகிறது. என்றார்.