ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
பண்டிகை நாட்களில் அனைத்து டிவிக்களுமே புதிய படங்களை ஒளிபரப்பு ரசிகர்களை கவரப் பார்ப்பார்கள். அந்த விதத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரு முன்னணி டிவியில் திரைக்கு வந்து மூன்று மாதங்களே ஆன 'மாஸ்டர்' படத்தை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.
அதே சமயம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடைசி கட்டத்தில் இருந்தது. மதியம் 2 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி இரவு 8 மணி வரை சென்றது. 'மாஸ்டர்' படம் ஆரம்பமான நேரத்தில் விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி'யில் சிறப்பு விருந்தினராக சிலம்பரசன் வந்த நேரம் அது. ஆச்சரியப்படும் விதத்தில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரைப் பற்றியும் பேசி அவர்களைப் பாராட்டினார் சிம்பு.
டிவி பார்க்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. நேற்று இறுதிப் போட்டி என்பதால் பலரும் அதைப் பார்க்காமல் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். மேலும், படம் தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடியில் வேறு வெளிவந்ததால் பலரும் ஓடிடி தளத்திலேயே பார்த்திருப்பார்கள். எனவே, அவர்கள் படத்தைப் பார்க்காமல் 'குத் வித் கோமாளி' நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம்.
டிவி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங்கைப் பெற்ற படங்களில் முதலிடத்தில் இருக்கும் 'விஸ்வாசம்' படத்தை 'மாஸ்டர்' படம் முறியடிக்குமா என நேற்று காலையில் கூட நாம் செய்தி வெளியிட்டோம். இருந்தாலும் 'மாஸ்டர்' படத்திற்கு நேற்று 'குக் வித் கோமாளி' சரியான 'டப்' கொடுத்துள்ளது. அதை மீறி 'மாஸ்டர்' டிவி ரேட்டிங்கில் சாதனை படைத்திருக்குமா என்பதை ஒரு வாரம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.