2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு தமிழில் 'அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார். அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் 'ரெண்டகம்' என்றும் மலையாளத்தில் 'ஒட்டு' என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இப்படங்களின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நடிகர்கள் பலரும் சொந்தப் படத் தயாரிப்பில் அதிகமாகவே ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆர்யா படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.