ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
பொன்ராம் இயக்கத்தில் அந்தோணிதாசன் இசையமைப்பில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, நந்திதா ஸ்வேதா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. இப்படம் ஏப்ரல் 23ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த வாரத்திலிருந்து தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்தது.
அதனால், வரும் வாரங்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் வருமா, வராதா என்ற சந்தேகம் எழுந்தது. ஏப்ரல் 23ம் தேதி வெளியாவதாக இருந்த 'தலைவி' படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறோம் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். மற்ற படங்களையும் அப்படியே தள்ளி வைப்பார்களா என்று குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி ஏப்ரல் 23ம் தேதி 'எம்ஜிஆர் மகன்' படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். '50 சதவீத ஆடியன்ஸ், 100 சதவீத என்டர்டெயின்மென்ட்' என சொல்லி விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
படத்தை இயக்கியுள்ள பொன்ராம் இதற்கு முன் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' ஆகிய படங்கள் இப்படித்தான் என்டர்டெயின்மென்ட்டாக அமைந்தன. ஆனால், அடுத்து அவர் இயக்கிய 'சீமராஜா' ஏமாற்றத்தைத்தான் தந்தது. இந்த 'எம்ஜிஆர் மகன்' என்டெர்டெயின்மென்ட்டா, ஏமாற்றமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.