ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமாவில் நடிகர் யோகிபாபுவின் கை தான் தற்போது ஓங்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான சுல்தானில் காமெடியனாக, மண்டேலாவில் கதையின் நாயகனாக, கர்ணனில் குணச்சித்திர நடிகராக என கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் வீரப்பன் கஜானா என்கிற படத்தில் புதையலை தேடி அலையும் நபராக நடித்துள்ளார் யோகிபாபு. மகளும் காணாமல் போன தனது குரங்கை தேடி காட்டில் அலையும் நபராக மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார். ராஜேஷ், தேவா மற்றும் பூஜா என இளசுகளின் முக்கோண காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தாலும் யோகிபாபு மற்றும் மொட்ட ராஜேந்திரன் இருவருக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை இயக்கிய கவுதம்ராஜ் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். யாசின் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். குற்றாலம், நாகர்கோவில், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.