2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அஜித் ஒரு சாகச பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, கார், பைக் ரேசில் ஆர்வம் காட்டுபவர். அதனால் அஜித் நடிக்கும் படங்களில் பைக் அல்லது கார் சேசிங் காட்சிகள் ஏதோ ஒருவிதத்தில் தவறாமல் இடம்பெற்று விடும்.. அந்தவகையில் இன்னும் ஒரு படி மேலே போய், தற்போது தான் நடித்து வரும் வலிமை படத்தில் பஸ் ஒன்றையே ஓட்டியுள்ளாராம் அஜித்.
வில்லன்களுடனான சேசிங் காட்சியின்போது அஜித் பஸ் ஓட்டுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம். .இந்தப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் வினோத் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இதேபோல ஓடும் பஸ்ஸில் சண்டைக்காட்சியை படமாக்கி பிரமிக்க வைத்தவர் தான். அதுமட்டுமல்ல, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே ஒருமுறை கூறியபோது, அஜித் இந்தப்படத்தில் சில சாகச காட்சிகளில் டூப் போடமல், தானே நடித்துள்ளார் என கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.