காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் பரத், வாணி போஜன் நடிக்கிறார்கள். பல குறும்படங்களை இயக்கிய எம்.சக்திவேல் இயக்குகிறார். கடந்த மாதம் பூஜை போடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு கொரோனா 2வது அலை காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு கூறியதாவது : இது நான் தயாரிக்கும் 12வது படம். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படத்தின் கதையும், கதையின் பின்புலமும் மிகவும் புதிதாக இருக்கும். நகருக்கு வெளியே காற்றாடி விண்ட்மில்லை சுற்றியே மொத்த கதையும் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.
பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோரை முன்னணி பாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என இயக்குநர் சொன்ன போது இப்படத்திற்கு கச்சிதமான தேர்வு என எனக்கும் தோன்றியது. பரத் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நாயகன். வாணிபோஜன் எங்களின் மிகப்பெரும் ஹிட் படமான ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார். அற்புதமான நடிகை அவருடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி. இருவருக்கும் சமமான பாத்திரம் படத்தில் உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கியமானதொரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்புக்கு நாங்கள் தயாராக உள்ளோம். கொரோனா பரவல் மட்டும் கட்டுப்பாடுகளை பொறுத்து படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம். என்றார்.