ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்நோய்க்கான லேசான அறிகுறி உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேப்போன்று நடிகர் மாதவன், அவரது குடும்பத்தார், தயாரிப்பாளர் சசிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு கூறுகையில், ‛‛எனது கணவர் சுந்தர்.சிக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி, தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறோம். அவர் விரைந்து குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ‛‛4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு நெகடிவ் வந்துள்ளது. மீண்டும் இன்று(ஏப்., 12) பரிசோதனை செய்ய உள்ளேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு சென்னையில் பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மனைவிக்காக சுந்தர்.சியும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.