போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்பட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4 அன்று தொலைக்காட்சியில் வெளியான படம் மண்டேலா. இந்த படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோ தயாரித்தது. இந்நிலையில் மண்டேலா படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதை அடுத்து இப்படத்தை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, படநாயகன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஷ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.