பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியை சேர்ந்தவர். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். தனது பேச்சு திறன் மற்றும் டைமிங் காமெடி சென்சால் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் எளிய வாழ்க்கையை விரும்புகிறவராக இருக்கிறார். எளிய உடைகள் அணிவது, எல்லோரிடமும் எளிமையாக பழகுவது அவரது வழக்கமாக உள்ளது. "சினிமா நட்சத்திரத்தின் மகள் என்ற கிரீடம் இல்லாமல் என் மகள் மற்ற குழந்தைகளை போலவே இந்த உலகத்தை புரிந்து வளர வேண்டும்" என்று சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் டவுன் பஸ்சில் தனது மகளுடன் பயணம் செய்திருக்கிறார். அந்த பயணத்தில் அவர் மகளுக்கு சென்னையை சுற்றிக் காட்டியதோடு, அந்த பகுதியில் என்ன மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவரது பஸ் பயணத்தை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது இப்போது வைரலாக பரவி வருகிறது.