பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு |

செண்பா கிரியேஷன்ஸ் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சின்னஞ்சிறு கிளியே. பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். செந்தில் நாதன், சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், லீலா, செல்லதுரை, பாலாஜி சண்முக சுந்தரம், குரு உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் கூறியதாவது: இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது. படத்தை பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது என்றார்.