தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி, ‛ராக்கெட்ரி நம்பி விளைவு' என்ற பெயரில் படமாக எடுத்து, நடித்து, இயக்கி உள்ளார் மாதவன். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் சமூகவலைதளத்தில், ‛‛சில வாரங்களுக்கு முன் நம்பி நாராயணன் உடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்தேன். படத்தின் சில காட்சிகளை பிரதமருக்கு போட்டுக் காட்டினோம். அதை பார்த்துவிட்டு தமது கருத்தினை தெரிவித்தார். மேலும் நம்பி நாராயணன் விவகாரத்தில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது குறித்தும் கேட்டறிந்தார்'' என பதிவிட்டார் மாதவன்.
இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில், ‛‛உங்களையும்(மாதவன்), புத்திசாலியான நம்பி நாராயணனையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த படம் ஒரு முக்கியமான விஷயத்தை உள்ளடக்கி உள்ளது. இதை மக்கள் அறிய வேண்டும். நமது விஞ்ஞானிகள் மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர்கள். நம் நாட்டிற்காக பெரும் தியாகங்களை செய்துள்ளனர் என்பதை இப்படத்தின் காட்சிகளில் காண முடிந்தது என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாதவன்.
1994ல் ராக்கெட் தொழில்நுட்பங்களை வெளிநாட்டிற்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு நம்பி நாராயணனை கைது செய்தது புலனாய்வுத்துறை. ஆனால் அவர் குற்றமற்றவர் என்பது பின்னர் நிரூபணமானது. ஆனால் இந்த குற்றச்சாட்டு மற்றும் வழக்கினால் மனதளவில் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்கு தான் ஆளானதை ஒரு புத்தகமாக எழுதியிருந்தார் நம்பி நாராயணன். அதை மையமாக வைத்துதான் இப்போது ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை இயக்கியிருக்கிறார் மாதவன்.