நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே சில இடையூறுகள் ஏற்பட்டதால் பாதி படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமல் அரசியல் பணிகளில் இறங்கி விட்டதால், தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரணை வைத்து புதிய படவேலகளை தொடங்கினார் ஷங்கர்.
தற்போது ராம்சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா படவேலைகள் முடிவடைந்து விட்டதால் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து நடித்துள்ள நிலையில், மீண்டும் ஷங்கர் படத்திலும் அவர்கள் இணைகிறார்கள்.
மேலும், இந்தியன்- படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அடுத்த படவேலைகளில் ஷங்கர் இறங்க வேண்டும் என்று அவருக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளது லைகா நிறுவனம். நீதிமன்றமோ ஷங்கரிடத்தில் விளக்கம் கேட்ட பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி விட்டது. ஆனால் இப்படி லைகா நிறுவனம் தடை கோரிவழக்குத் தொடர்ந்தபோது, அதுபற்றி கவலைப்படாமல் ராம்சரண் படவேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர்.