ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து சென்றனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வந்தனர். தொடர்ந்து ஓட்டளித்து விட்டு உதவியாளர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.
இதனிடையே விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அதோடு தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட ரூ.100 என்ற நிலையில் உள்ளதால் அதை குறிக்கும் வகையில் மறைமுகமாக பா.ஜ.விற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிக்கவே விஜய் இப்படி சைக்கிளில் ஓட்டளிக்க வந்ததாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.
![]() |