'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் வடசென்னை பாக்ஸராக நடித்துள்ளார் ஆர்யா. இப்படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றினார். இதற்கான கடின பயிற்சியும் மேற்கொண்டார் ஆர்யா. இப்படத்தில் நடித்தவர்களின் கேரக்டர்கள், அதற்கு அவர்கள் தயாரான விதம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோ லிங்க்கையும், ஆர்யாவின் போட்டோ ஒன்றையும் சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஆர்யாவின் மாமியார் சாகீன், ‛‛உங்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்தசாலித்தனம் ஆகியவற்றின் உச்சம் நீங்கள். என்றும் எங்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள், வேற லெவலுக்கு சென்றுள்ளீர்கள். என புகழ்ந்துள்ளார். இதற்கு ‛நன்றி அம்மா' என ஆர்யா பதில் கூறி உள்ளார்.