அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை எடுக்க உள்ளார். இதற்கான பணி நடந்து வந்தது. ஏற்கனவே படத்தின் டைட்டில் டீசரையே வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருந்தார் லோகேஷ். தற்போது கமல் அரசியல் பணியில் இருப்பதால் லோகேஷ் படத்திற்கான முன்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவி வரும் சூழலில் லோகேஷ் கனகராஜ், இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛என் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான் ஒரு விஷயத்தை பகிர்கிறேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நலமாக உள்ளேன். விரைவில் இதிலிருந்து மீண்டு தெம்பாக வருவேன்'' என தெரிவித்துள்ளார்.