ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ராசுமதுரவன், மனோஜ்குமார், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் தண்ணிவண்டி. தம்பி ராமைய்யா மகன் உமாபதி, சம்ஸ்கிருதி நடித்துள்ளனர், பாலசரவணன், தம்பி ராமய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. டீசரை இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்டு பேசியதாவது: ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான் கூட ஒடிடி தளம் துவங்குவேன் . எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம்.
தியேட்டரில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரயிலில் கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ் இருக்கு. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு. இது என்ன சர்வதிகார நாடா? இல்ல ஜனநாயக நாடா? டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்?.
டிக்கெட் ரேட் தான் அதிகமென்றால் பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய் 70 ரூபாய் தான் டிக்கெட். டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை? மனமில்லை? டிக்கெட் விலையை குறைத்தால் சிறியபடங்கள் வாழும்.
இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.