பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் |
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நயன்தாராவைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதென செய்திகள் பரவி வருகின்றன. அது குறித்து இருவருமே எந்த ஒரு மறுப்பையும் வெளியிடவில்லை.
அவர்களது காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. இரு வீட்டாரும் ஏற்கெனவே சம்மதம் சொல்லிவிட்டனர். நயன்தாரா 36 வயதைக் கடந்துவிட்டார். எனவே, இனிமேலும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாமென நயன்தாரா நினைக்கிறாராம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவாவைக் காதலித்த போது இந்து மதத்திற்கு மாறினார். காதலர் விக்னேஷ் சிவனுடன் பல கோயில்களுக்கும் சென்று வந்தார். அவர்களது திருமணம் எந்த முறைப்படி நடக்கும், எங்கு நடக்கும் என்பது குறித்தும் முடிவெடுத்துவிட்டார்களாம். விரைவில் அவர்களது திருமணத் தேதி பற்றி அறிவிப்பு வெளியிடலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.