பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
ஜேக்கப்பிண்ட சுவராஜ்யம் என்ற மலையாள படத்தில் அறிமுமாகி ஜருகண்டி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ரெபா மோனிகா ஜான். தனுஷ் ராசி நேயர்களே உள்பட சில படங்களில் நடித்தார். விஜய் நடித்த பிகில் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனையாக நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் எப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆல்பங்களிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அவர் ஆடி நடித்து வெளியாகி உள்ள குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் - நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் அவருடன் இணைந்து ஆடி, நடித்துள்ளார்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார், வெங்கி இயக்கி உள்ளார். ஒரு திருமண நாளில் மன கசப்பால் பிரிந்திருக்கும் காதலனும், காதலியும் சந்தித்து இணைவது தான் கான்செப்ட். வெளியான ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.