‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகரான நாகார்ஜூனா, தற்போது பிரவீன் சத்தாரு இயக்கும் தனது 97ஆவது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். அதையடுத்து 98ஆவது படத்தையும் இந்த ஆண்டிற்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 99ஆவது படத்தில் நடிப்பவர் அதை முடித்ததும் தனது 100ஆவது படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து லூசிபர் ரீமேக் படத்தை இயக்கவிருக்கும் மோகன்ராஜா இயக்குகிறார். ஏற்கனவே மனம் என்ற படத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகனான நாகார்ஜூனா, பேரன்களான நாகசைதன்யா ஆகியோர் நடித்தது போன்று இப்படமும் ஒரு மல்டி ஸ்டார் கதையில் உருவாகிறது.
அப்பா - மகன் கதையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜூனாவும், அகிலும் நடிக்க, நாகசைதன்யா இன்னொரு வேடத்தில் நடிக்கிறாராம். குறிப்பாக, மனம் படத்தில் நாகசைதன்யா படம் முழுக்க வந்தது போன்று இப்படத்தில் அகில் நடிக்கிறாராம். இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து, நடிக்கப் போகிறார் நாகார்ஜூனா.