'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'பயோகிராபி' படமென்றால் யாரைப் பற்றிப் படமெடுக்கிறார்களோ அவருக்குப் பொருத்தமான கதாபாத்திரத் தேர்வு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதுவே படத்திற்கான பாதி வெற்றியைக் கொடுத்துவிடும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த போதே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ஜெயலலிதாவின் தோற்றத்திற்கும் கங்கனாவின் தோற்றத்திற்கும் பொருத்தமாக இல்லையே என்ற குரல்தான் அதிகம் ஒலித்தது.
ஆனால், இன்று படத்தின் டிரைலரைப் பார்த்ததும் அந்தக் குறையும் தெரியாமல் போயிருக்கும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ஜெயலலிதா கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார் கங்கனா.
படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி, ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை பாக்யஸ்ரீ, எம்ஜிஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருந்த ஒருவரது கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களான கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கிறார். ஆனால், டிரைலரில் அவர் தோற்றத்தை சில வினாடிகள் மட்டுமே காட்டுகிறார்கள்.
சசிகலா கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். ஆனால், அவரது காட்சிகள் தமிழ் டிரைலரில் ஒரு வினாடி கூட வரவில்லை. அதே சமயம் ஹிந்தியில் ஒரு காட்சியில் ஜெயலலிதா பின்னாடி நிற்பது போலக் காட்டுகிறார்கள்.
தற்போது தேர்தல் நேரம் என்பதால் இந்தப் படத்தின் டிரைலர் பரபரப்பை ஏற்படுத்தலாம். இருந்தாலும் தமிழ் டிரைலரை விட ஹிந்தி டிரைலர்தான் பார்வைகளில் முந்துகிறது.