'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. அந்த படத்தின் நாயகனாக தனுஷின் நடிப்புக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துணை நடிகராக விஜய் சேதுபதிக்கும், பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு 2 விருதுகளும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானுக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், டி.இமானை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தி தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், வாழ்த்துக்கள், மிக தகுதியானவர் என்று பதிவிட்டுள்ளார். அதோடு பார்த்திபனுக்கு வாழ்த்துக்கள் என டுவிட்டரில் ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.




