மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தில் வில்லனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைக் கேட்டுள்ளார்கள். இப்படத்தில் தமிழர்களைப் பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், அதனால்தான் விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியது.
தற்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பஹத் பாசிலை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஆதி, தனஞ்செயா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்போது, பஹத்தும் வந்துள்ளதால் நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் இப்படம் மேலும் பிரம்மாண்டமாகி உள்ளது.
அல்லு அர்ஜுனுக்கு ஏற்கெனவே கேரளாவில் தனி மார்க்கட் உண்டு. தற்போது பஹத்தும் நடிப்பதால் மலையாளத்தில் இப்படத்திற்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக உள்ளது.