'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார். விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார் மயில்சாமி.
அவர் கூறுகையில், ''நான் எம்ஜிஆரின் தீவிர பக்தன். பல ஆண்டுகாலம் அவரின் அரசியலை பார்த்தவன். தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கொதித்து போய் தான் களத்தில் இறங்கி உள்ளேன். அரசியலில் பலரும் சுயநலமாகவே செயல்படுகின்றனர். நான் இந்த ஏரியா மக்களிடம் பல ஆண்டுகளாக பழகி உள்ளேன். என்னிடம் காசு, பணம் இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. ரொம்ப சாதாரணமானவன். கமல் முதல் பலரும் என் நட்பு வட்டத்தில் இருந்தாலும் நான் எங்கும் செல்லவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க மாட்டேன்'' என்றார்.