'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? | நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை | தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி | தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் | மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமா |
மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மயில் சாமி, யுவன் மயில்சாமி ஆகிய இருவரும் சில படங்களில் நடித்துள்ளார்கள். என்றாலும் அவர்கள் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் இன்னும் பிரபலமாக முடியாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் மயில்சாமியின் இளைய மகனான யுவன் மயில்சாமி தற்போது சின்னத்திரைக்கு வந்துள்ளார். விஜய் டிவியில் வெளியாக இருக்கும் தங்க மகள் என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடிக்கிறார். சினிமாவில் எதிர்பார்த்தபடி சரியான வாய்ப்புகள் அமையாததால் யுவன் மயில்சாமி சின்னத்திரைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.