விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! |
மஹா சிவராத்தி திருவிழா நேற்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் தெரிவித்தனர். சமந்தா, ரகுல் பிரீத் சிங் போன்றவர்கள், மஹா சிவராத்திரி திருவிழாவில் நேரடியாக பங்கேற்றனர். இந்தநிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட், “மஹா சிவராத்திரியை கொண்டாடுபவர்கள் சிவனின் படத்தை பகிர்வதற்கு பதிலாக தேவைப்படுவர்களுக்கு உதவி செய்து கொண்டாடலாமே” என கூறியிருந்தார்.
இது இந்துக்கள் பலருக்கு, குறிப்பாக சிவ பக்தர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சோனு சூட்டுக்கு, சோஷியல் மீடியாவில் அவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து, தற்போது வரை தனது சொந்தப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் தான் சோனு சூட். அந்த அர்த்தத்தில் மற்றவர்களுக்கு உதவுங்கள் என அவர் சொல்லப்போக, அது தற்போது சர்ச்சையாக மாறிவிட்டது.
இதேபோலத்தான் சில மாதங்களுக்கு முன் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “தஞ்சாவூரில் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் அங்கிருந்த அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை பார்த்தேன். கோயில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதிலாக மருத்துவமனைகளுக்கும் கல்விக் கூடங்களுக்கு செலவு செய்யலாமே” என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என உற்சாகப்படுத்தும் பிரபலங்கள், அவற்றுடன் மத விஷயங்களை ஒப்பிட்டு பேசுவதை தவிர்ப்பதே நல்லது என்பது இவர்கள் இருவருக்கான எதிர்வினைகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.