நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

நடிகை சமந்தாவின் கணவரும் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகருமான நாகசைதன்யா, தற்போது 'தேங்க்யூ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடித்த '24' படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தில், அவர் ஹாக்கி விளையாட்டு வீரராக நடிக்கிறார்.. அதேசமயம் இந்தப்படத்தில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகராக, அவரது ரசிகர்மன்ற தலைவராகவும் நாகசைதன்யா நடிக்கிறார் என்கிற தகவலும் சில நாட்களுக்கு முன் கசிந்தது.
தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில், சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று லீக்காகி உள்ளது. அந்த வீடியோவில் மகேஷ்பாபுவின் கட் அவுட் பின்னால் இருக்கும் சாரத்தின் மீது நாகசைதன்யா மேலே ஏறுகிறார். பின்னர் உச்சியில் இருந்து கட் அவுட் மீது போர்த்தப்பட்டிருக்கும் துணியை விலகி அதை திறந்து வைத்து கோஷம் போடுகிறார்... அதேசமயம் இந்த காட்சி சோஷியல் மீடியாவில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து, படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி இருக்கிறார்களாம்.




