பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட துல்கர் சல்மான், திரையுலகில் நுழைந்து பத்து வருடங்களை தொட்டுவிட்ட நிலையில், தற்போது தான், முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வரும் நிலையில், நாம் ஏற்கனவே சொன்னதுபோல, தற்போது இந்த படத்திற்கு சல்யூட் என்றே டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.
காக்கி யூனிபார்மில் துல்கர் சல்மான் மிடுக்காக காட்சி அளிப்பதாகவும், நிச்சயம் ஒரு கமர்ஷியல் விருந்து காத்திருக்கிறது என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்கிறார்..