ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் படப்பிடிப்பில் இருக்கும் போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வாகனம்தான் 'கேரவன்'. வெளித்தோற்றத்தில் ஒரு பஸ்ஸைப் போல இருக்கும் அந்த வாகனம் உள்ளே ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் அறைக்குரிய வசதிகள் அனைத்தும் இருக்கும்.
டிவி, ஏசி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை, சோபா, வாஷ் பேசின் என ஓய்வெடுக்கத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும். முன்னணி நடிகர்கள், நடிகைகள் என்றால் அவர்களுக்காக இரண்டு, மூன்று அறை கொண்ட 'கேரவன்'களைக் கொடுப்பார்கள். மற்ற நடிகர்களுக்கு ஒரே ஒரு அறை கொண்ட கேரவன்கள்தான் கொடுக்கப்படும். இவற்றிற்கான செலவுகள் அனைத்தையும் தயாரிப்பாளர்கள்தான் செய்வார்கள்.
முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறும் படப்பிடிப்பில் இது போன்று பத்து கேரவன்களைக் கூடப் பார்க்கலாம். தென்னிந்தியாவில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பல கோடி ரூபாய் செலவு செய்து சொந்தமாக ஒரு கேரவனைத் தயார் செய்து கொண்டார்.
இப்போது நடிகர் மகேஷ் பாபுவும் சொந்தமாக ஒரு கேரவனை தயார் செய்து வாங்கியுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதை வடிவமைத்துக் கொடுத்துள்ளதாம். இனி, அவர் கலந்து கொள்ள உள்ள படப்பிடிப்புகளில் இந்த கேரவனை பிரத்தியேகமாகப் பயன்படுத்த உள்ளாராம்.