தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் |
மோகன கிருஷ்ணா இந்திராகந்தி இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்து கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியான தெலுங்குப் படம் 'வி'. இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அந்த மொழிகளிலும் ஓடிடி தளத்தில் இடம் பெற்றது.
படத்தில் ஒரு காட்சியில் ஹிந்தி நடிகையான சாக்ஷி மாலிக் என்பவரது புகைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. தன்னுடைய புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சாக்ஷி.
“ஒருவரது தனிப்பட்ட விஷயத்தின் மீதான உரிமை மீறல், தனிப்பட்டட விஷயத்தை அனுமதியின்றி பயன்படுத்துதல்” என அவரது சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் முறையிட்டார்கள். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 24 மணி நேரத்தில் அந்தப் படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டுமென உத்தரவிட்டார்கள். அதைத் தொடர்ந்து படத்தை அமேசான் தளம் நீக்கிவிட்டது.
மேலும், அந்தக் காட்சியில் இருந்த சாக்ஷி மாலிக் புகைப்படத்தை மாஸ்க் செய்தோ, பிளர் செய்தோ பயன்படுத்தக் கூடாது, முழுவதுமாக காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்தக் காட்சியை நீக்கிய பிறகு படம் மீண்டும் ஓடிடி தளத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
இந்த வழக்கில் சாக்ஷி மாலிக் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இனி பிரபலங்களின் புகைப்படங்களை அவர்களது அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்த முடியாது. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதில் கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.