ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

ராஜமவுலி இயக்கிய ‛பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன்பிறகு தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ், பாகுபலி படத்தில் நடித்து வந்தபோது அவரும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அவர்கள் இரண்டு பேருமே நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
அதன் பிறகும் பிரபாஸுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. என்றாலும் அவரது திருமணம் நடந்தபாடில்லை. இந்த நிலையில் தற்போது பிரபாஸின் உறவினர் சியாமளா தேவி என்பவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛தற்போது பிரபாசுக்கு 45 வயதாகி விட்டதால் அவருக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கூடிய சீக்கிரமே சிவனின் அருளால் பிரபாஸுக்கு திருமணம் நடைபெறும்'' என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




