41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? | ஹிந்தியில் ரீமேக் ஆகிறது தலைவர் தம்பி தலைமையில் |

கொரோனா தாக்கத்திற்கு பிறகு மம்முட்டி நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் படம் 'ஒன்'. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.. குஞ்சாக்கோ போபன் நடித்த 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கிலும் தமிழிலும் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை இயக்குனர் ராம் எழுதியுள்ளதுடன் படத்தின் டப்பிங் பணிகளையும் தற்போது மேற்பார்வை செய்து வருகிறார். ஏற்கனவே மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்று படத்திற்கும் இயக்குனர் ராம் தான் வசனம் எழுதியிருந்தார். மம்முட்டியை வைத்து தமிழில் பேரன்பு படத்தை இயக்கிய இயக்குனர் ராம், தொடர்ந்து மம்முட்டியின் குட்புக்கில் இடம் பெற்று, நட்பை தொடர்ந்து வருகிறார் என்பது இதன்மூலம் நன்றாகவே தெரிகிறது..




