'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

'பாகுபலி' படங்களின் வெற்றி மூலம் பான்-இந்தியா நடிகராக மாறியவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அப்படங்களுக்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் மற்ற மொழிகளில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் வெற்றி பெற்றது.
பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'ராதே ஷ்யாம்'. அதற்கடுத்து அவர் நடிக்கும்'ஆதி புருஷ், சலார், நாக் அஸ்வின் இயக்கும் படம்' என அடுத்தடுத்த படங்களும் பான்-இந்தியா படங்களாகவே தயாராகி வருகின்றன.
ஒரு படத்திற்காக பிரபாஸ் வாங்கும் சம்பளம் 100 கோடியைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். மேலும், சில படங்களுக்கு அவருக்கு லாபத்திலும் பங்கு தரும்படி ஒப்பந்தம் இருக்கிறது என்கிறார்கள்.
தொடர்ச்சியாக மூன்று படங்களிலும் மாறி மாறி நடிக்க வேண்டும், அவற்றின் பிரமோஷன்களுக்குச் சுற்ற வேண்டும் என்பதால் மும்பையில் விலை உயர்ந்த அபார்ட்மென்ட் ஒன்றை கடற்கரை பகுதியில் வாங்க முடிவெடுத்துள்ளாராம் பிரபாஸ். அதற்கான தேடுதல் வேட்டையும் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்கள் சிலர்தான். தற்போது பாலிவுட் நடிகர்களுக்கும் போட்டி தரும் அளவிற்கு பிரபாஸ் வளர்ந்துவிட்டார் என்பதில் தெலுங்குத் திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.




